Get Predictions in
தமிழ் & English
My predictions cover all houses,
Important dashas and your questions.
Simple 3 questions prediction starting just Rs 149/~
அண்ணாமலை அவர்களுக்கு தமிழக முதல்வர் ஆகும் யோகம் உள்ளதா???
பிரபல முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய தமிழக பாஜகவின் தலைவருமாகிய அண்ணாமலை அவர்களின் ஜாதகம் பிரபல ஜோதிடர் பிவி நரசிம்மராவ் அவர்களின் பதிவில் இருந்து கிடைக்கப்பெற்றது, ஆனால் அதில் அவர் கன்யா லக்னத்தை அண்ணாமலை அவர்களின் லக்னமாக குறிப்பிட்டுள்ளார், ஆனால் அண்ணாமலை அவர்களின் தோற்றம் பேச்சு ஆளுமை தைரியம் நேர்மை யாருக்கும் அஞ்சாத குணம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது அவர் நிச்சயமாக சிம்ம லக்னத்தில்தால் பிறந்து இருப்பார் என முடிவுக்கு வரலாம், மேலும் கர்நாடக சிங்கம் என தனது பணிக்காலத்தில் பெயர் எடுத்தவர் அண்ணாமலை.
கிரக அமைப்புகளை கவனித்தால், 5ல் குரு, நான்கில் கேது, மூன்றில் செவ்வாய் சனி, பத்தில் ராகு சூரியன் புதன் சுக்கிரன், 12 ல் சந்திரன்.
பொதுவாகவே சூரியன் பத்தில் உச்சம் என்பது உயர்பதவிகளையோ அரசியல் அதிகாரத்தையோ கொடுக்கும், அதுவும் சிம்ம லக்ன நபர்களுக்கு சொல்லவே வேண்டாம், இவர் பள்ளி காலம் முதலே பிறரை வழிநடத்தும் ஆளுமை கொண்ட நபராகத்தான் இருந்திருப்பார், சூரியன் நின்ற வீட்டின் அதிபதியான சுக்கிரன் சொந்த வீட்டில் இருப்பதால் இவர் எடுத்த எடுப்பிலேயே பல வெற்றிகளை குவிக்க கூடிய நபராக இருப்பார்,
இந்த கிரக அமைப்புடன் புதன் சேர்வதால் புத்திசாலித்தனம் நிறைந்த நபராகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் கணிதத்தில் ஆர்வம் உடையவராகவும், நிறைய புத்தகங்களை வாசித்து அறிவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார், ராகு சேர்க்கை காரணமாக நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு அதன்மூலம் தனது கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் நபராகவும் இருப்பார்.
அதேசமயம் ராகு சூரியன் சேர்க்கை சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும், ஆகவே இவர் உயர்பதவிகளை அடைவதை தடுக்க மிகப்பெரிய அளவில் சதி செய்யும் கூட்டம் இவரை சுற்றியே இருக்கும், அதை தாண்டி வருவதில்தான் இவரின் வெற்றி அடங்கி உள்ளது.
மூன்றில் செவ்வாய் சனி சேர்க்கை எதிரிகளை போராடி வீழ்த்தும் அமைப்பாக இருக்கிறது, செவ்வாய் சனியுடன் சேர்ந்த காரணத்தாலோ என்னவோ செவ்வாய் காரகம் பெற்ற காவல் துறை உயர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
சனி அடித்தட்டு மக்களை குறிக்கும், சனி உச்சம் பெற்றாலும் செவ்வாய் சேர்க்கை என்பது அடித்தட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று தருவதில் 50% அளவே பலன் தரும், ஆனால் மற்றபடி மாணவர்கள், பெண்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், தொழில் முனைவோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்கு இருக்கும்.
நான்கில் கேது, ஞானத்தை வாரி வழங்கும், சுகபோக வாழ்க்கையை வெறுப்பவராகவும் எளிமையை நாடுபவராகவும், ஆன்மீக ரகசியங்களை நாடி சென்று ஞானத்தை சம்பாதிப்பவராக இருப்பார்.
ஐந்தில் குரு ஆட்சி பலத்துடன், இந்த அமைப்பு சிம்மம் மற்றும் விருச்சிக லக்ன நபர்களுக்கு மாத்திரமே இருக்கும் அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கிடைக்கும். கடவுள் பக்தியும் குருபக்தியும் உள்ள நபர், சாஸ்திரங்களில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட நபர், சட்ட நுணுக்கங்களை கற்றறிந்த நபர், நல்ல ஞாபக சக்தி கொண்டவர், நேர்மையாளர் என்று பெயர் எடுத்தவர்.
ஐந்தில் ஆட்சி குரு நிச்சயமாக கொள்ளை பிடிப்புள்ள அரசியல்வாதியாக இவரை உருவாக்கும், கட்சி மேலிடம் எப்போதும் இவருக்கு உறுதுணையாகவே இருக்கும், இவர் கட்சி சார்ந்த கொள்கைகள் பற்றி பலவருடம் கட்சியில் இருந்த தலைவர்களை விட இவர் நன்றாக அறிந்த நபராக இருப்பார், இதை வருங்காலத்தில் பார்க்கலாம்.
12 ல் சந்திரன் சனி பார்வை என்பது சன்னியாச யோகத்தை உண்டாக்கும் அமைப்பு என்பதால் பணி நிமித்தம் பல இடங்களில் இடம் மாற்றம், தற்போது அரசியல் காரணங்களுக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்தல் போன்ற அமைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கிரக அமைப்பும் கூட ஒரு வகையில் இவர் உச்ச பதவிகளை அடைய ஒரு உந்துதலாக இருக்கும்.
சரி இவரின் தசாபுத்திகளை பார்ப்போம்.
மே மாதம் 1999 வரை புதன் தசை
இது பள்ளிபருவ காலம், தனது படிப்பை நல்ல முறையில் நிச்சயமாக இவர் முடித்து இருப்பார்.
கேது தசை மே 2006 வரை,
இந்த தசை நிச்சயம் இவருக்கு பல அனுபவங்களை தந்து இருக்கும், நிறைய கஷ்டப்பட்டு இருப்பார், மனித வாழ்வு குறித்த புரிதலும் எதிர்காலத்தில் அடையப்போகும் லட்சியங்களுக்கான விதையும் இந்த காலத்தில்தான் நடந்து இருக்கும்.
சுக்கிரன் தசை மே 2026 வரை.
பத்தாம் இடத்தில் சொந்த வீட்டில் அமர்ந்த சுக்கிரன், கூடவே சூரியன் புதன் ராகு சேர்க்கை. இந்த காலக்கட்டத்தில் நல்ல உத்தியோகம் கிடைத்து இருக்கும். திருமணமும் நடந்து இருக்கும் சுக்கிரன் அவர்களின் அருளால். ஐபிஎஸ் தேர்வில் வென்று கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக அமர்ந்து திறம்பட செயலாற்றி நல்ல பெயரை ஏற்படுத்துகிறார்.
சுக்கிரன் தசை குரு புத்தி நடந்த காலகட்டத்தில்தான் இவரின் மனதில் பல மாற்றங்கள் உண்டானது, ஐந்தாம் இடத்து குரு ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி இவரை நடத்தி செல்ல ஆரம்பிக்கிறார். இமயமலையில் இவர் பெற்ற ஆன்மீக அனுபவமே இதற்கு சாட்சி, இதை பற்றி அண்ணாமலை அவர்களே கூறி இருக்குறார்.
சனி புத்தியில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியை வருகிறார். ஒரு வருடம் கழித்து பாஜகவில் இணைகிறார், சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைகிறார்.
தோல்விக்கான காரணம்???
நடப்பதோ சனி புத்தி செவ்வாய் கிரகத்துடன் இணைவு என்பது யுத்தத்திற்கு சமம், தவிரவும் அந்த காலகட்டத்தில் கோசார ரீதியாக குரு சனி லக்னத்திற்கு ஆறில் மறைந்தது அரசியலில் எதிர்பாராத தோல்வியை தந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் இவர் பெரும்பாலும் சனிபகவானுக்கு உரிய நீல நிற உடையை பெரும்பாலும் அணிந்து வலம் வந்தார். சனி பகவான் யாருக்கு எப்படியோ சிம்ம லக்னத்திற்கு பாதகமான பலனை கொடுக்காமல் இருக்க மாட்டார்.
ஆனால் தேர்தல் தோல்விக்கு பிறகு, கட்சியில் உயரிய பதவி கிடைத்துவிட்டது, கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்தில் இந்த அளவிற்கு உயர்வது மற்றவர்களுக்கு எளிதான விசயம் அல்ல.
வருங்காலம் எப்படி இருக்கும்.???
இவரின் தலைமையில் கட்சி மிகப்பெரிய போராட்ட குணத்துடன் களத்தில் நிற்கும், ஏகப்பட்ட பிரச்சனைகளை இவர் சந்திக்க நேரிடும், மே 2022 க்கு பிறகு சுக்கிர தசையில் புதன் புத்தி நடக்க இருப்பதால் அதன்பிறகு மீடியாக்களில் இவர் தலைப்பு செய்தியாக இடம்பெறுவார். இவரை சுற்றித்தான் தமிழக அரசியல் சுழலும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பலம் வாய்ந்த கூட்டணியை அமைப்பார், கூட்டணி பங்கீடுகளில் தனது ஆளுமையை பயன்படுத்தி தான் நினைத்த எண்ணிக்கையில் சீட்களையும் தேர்ந்து எடுத்து வைத்து இருந்த தொகுதிகளையும் பிடிவாதமாக பெற்று விடுவார். அதன்மூலம் கட்சி மேலிடத்தையும் தன்னை நம்பி வந்தவர்களையும் சந்தோசப்படுத்த முடியும். தனது பிரச்சாரத்தால் நிச்சயமாக ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தருவார்.
முதல்வர் ஆவாரா????
மே 2026 ல் சூரிய தசை ஆரம்பம், ஏற்கனவே சுக்கிர தசையில் உச்சம் தொட்ட இவர் சூரிய தசையில் மேலும் வெற்றிகளை குவிப்பார், அப்போது நடக்க போகும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை சொன்னது போலவே வெற்றி பெற செய்துவிடுவார் என்பது உறுதி. 2026 ல் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.