Get Predictions in
தமிழ் & English
My predictions cover all houses,
Important dashas and your questions.
Photo by Kazuky Akayashi on Unsplash
சிம்ம ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது ஐந்தாம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு நடைபெறுகிறது.
பொதுவாகவே ஆறாம் இடம் சத்ரு ரண ருண ஸ்தானம் எனப்படுகிறது. மேலும் ஆறாம் வீடு சனிபகவானுக்கு சொந்த வீடாகவும் அமைகிறது.
ஆகவே சிம்ம ராசிக்கார அன்பர்களுக்கு உடல் ரீதியாக சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். சளி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வந்து நீங்கும். சிலருக்கு புதியதாக கடன் வாங்க வேண்டிய நிலை கூட வரலாம்.
சொந்த தொழில் புரிவோர்:-
தொழில் வியாபார விருத்திக்காக சில கடன்களை வாங்க நேரிடலாம். வழக்கம் போல தொழிலாளர்களால் சில சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். இதை சரி செய்து கொள்ளாவிட்டால் வழக்கு வரை சென்று பண விரயம் ஏற்படும்.
பணிபுரிவோர் :-
உத்தியோகத்தில் உயர்வு என்பது உண்டு ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. கீழே பணிபுரியும் ஊழியர்களால் சிற்சில தொந்தரவுகள் பிரச்சினைகள் ஏற்படும்.ஆகவே அவர்களிடம் கவனம் தேவை.
மாணவர்கள் :-
இறுதி தேர்வு எழுதுபவர்கள் ஆயின் வெற்றி உண்டு. எதிர்பார்த்த அளவுக்கு தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கூட ஓரளவு கௌரவமான வேலை கிடைக்கும்.
மற்ற மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.
அரசியல்வாதிகள் :-
ஓரளவு சாதகமான காலகட்டம். அதே சமயம் அடித்தட்டு மக்களுக்காக உங்கள் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சற்றே அதிகமாக செலவிட வேண்டிய காலகட்டம் இது. இதை சரியானபடி கையாளவில்லை என்றால் மக்களிடையே எதிர்ப்பு வரும்.
விவசாயிகள் :-
ஓரளவு சாதகமான காலகட்டம். எள் மற்றும் தென்னை பனை விவசாயம் செய்வோர்களுக்கு மிக நல்ல முன்னேற்றம் உண்டு.
சனிபார்வை பலன்கள் :-
மூன்றாம் பார்வையாக எட்டாம் இடத்தை பார்ப்பதால் சில அவமானங்களும் இழப்புகளும் தேடிவரும். குறிப்பாக உங்களிடம் வேலை பார்ப்பவர்களிடம் கோபம் காட்டாதீர்கள்.
ஏழாம் பார்வையால் விரய ஸ்தானம் பார்க்கப்படுவதால் நீண்ட நாளைய கடன்களை அடைத்து விடுவது நல்லது இல்லை என்றால் புதிய செலவுகள் வரும்.
பத்தாம் பார்வையால் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் நண்பர்கள் சார்ந்து சில இன்னல்கள் வரும். சிலருக்கு சுவாச பிரச்சினை வரும்.
வழிபாடுகள் :-
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வன்னி மற்றும் வில்வ இலைகளால் சிவபெருமானை அர்ச்சணை செய்து வருதல் உடனடி நிவாரணம் தரும்.
Get Predictions in
தமிழ் & English
My predictions cover all houses,
Important dashas and your questions.
How do you like the post?
+1
+1
+1
+1
+1