Simple 3 questions prediction starting just Rs 149/~


அறிவுக்கூர்மைக்கும் வியாபார யுக்திக்கும் பெயர் போன மிதுன ராசி அன்பர்களே,

இந்த சனி பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தில் இருந்து எட்டாம் இடம் எனப்படும் அஷ்ட ஸ்தானத்திற்கு அமைகிறது.
இந்த அஷ்டம சனியானது மிகவும் சிரமமான காலகட்டம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மன ரீதியாக பலவிதமான உளைச்சல்கள்,குழப்பங்கள் ஏற்படும். வயதானவர்களுக்கு உடல் ரீதியாக பல இன்னல்கள் வரும். துன்பத்தின் எல்லையை சிலர் அடைந்துவிட்டதாகவே கருதுவார்கள். ஆனால் இன்பமோ துன்பமோ இந்த உலகில் எதுவும் நிரந்தம் இல்லை என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு இந்த அஷ்டம சனியானது ஒரு நல்ல பாடமாக அமையும்.
மாணவர்களுக்கு:- கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம். சிலர் கடினமான பாட பிரிவுகளை தேர்வு செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு எது எளிதோ அதை செய்யுங்கள் இதுதான் புத்திசாலித்தனம். தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது அதே சமயம் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். கேம்பஸ் செலக்சன் எல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும்.
சொந்த தொழில் செய்பவர்கள் :- புதிய முயற்சிகளை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒத்தி வையுங்கள். யாருக்கும் கடன் தருவதோ இல்லை வங்கியில் கடன் சிபாரிசோ செய்தீர்கள் என்றால் நிச்சயம் அது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக திரும்பி வரும். தொழிலாளர் விசயத்தில் கவனம் தேவை பண இழப்புகள் நிச்சயம் வரலாம்.
பணிபுரிவோர் :- சிலருக்கு punishment transfer போன்ற இடமாறுதல் உறுதி. பதவி உயர்வை எதிர்ப்பார்த்து காத்து இருப்பவர்கள் இரண்டரை ஆண்டுகள் பொறுத்து இருக்கவும். சில சமயம் சம்பளம் கூட தாமதமாகத்தான் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் :- போதாத காலம் என்பதால் தேர்தலில் நிற்பதை தவிர்க்கலாம். கட்சியிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி உங்கள் செல்வாக்கு அதள பாதாளத்திற்கு சரியும். எதிராளிகள் உங்களை தோற்கடிக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி தந்து விடுவீர்கள். தற்காலிக ஓய்வு எடுப்பது புத்திசாலித்தனம்.
விவசாயிகள் :- மழையே பெய்தாலும் விளைச்சல் என்பது இருக்காது, அதையும் மீறி விளைந்தால் விலை கிடைக்காது என்ற ரீதியில் இருக்கும். பயிர்களில் நோய் தாக்குதல் , வறட்சி, நீர் பற்றாக்குறை போன்றவற்றால் பொருள் இழப்பு வரும். கிணறு வெட்டுவதை தவிர்ப்பது நல்லது. கால்நடைகள் விசயத்தில் கவனம் தேவை இழப்புகள் வரலாம்.
சனி பார்வை பலன்கள் :-
மூன்றாம் பார்வையால் பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழில் ரீதியாக சில பாதிப்புகளை தந்தாலும் சில நிவாரணங்களையும் தரும்.
ஏழாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்ப ரீதியாக பிரச்சனை,வருவாய் இழப்பு, கண் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். சிலர் நாவடக்கத்துடன் செயல்படுவது நலம்.
பத்தாம் பார்வையாக ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் பூர்விக சொத்தில் சில பிரச்சனைகள் வரலாம். குழந்தைகள் படிப்பில் பிரச்சினைஏற்பட்டு விலகும். நீண்ட நாட்களாக குழந்தை இன்றி தவித்தவர்களுக்கு குழந்தை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
ஆக மொத்தம் இந்த அஷ்டம சனி பாதிப்புகளை தந்தாலும் பல நல்ல படிப்பினைகளையும் தரும். உங்களை சுற்றி உள்ளவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்ள சனீஸ்வர பகவான் அருள்புரிவார்.
வழிபாடு :-
சனிக் கிழமை தோறும் விஷ்ணு வழிபாடு, சகஸ்ரநாம அர்ச்சணை செய்தல், ஆஞ்சநேயரை குறிப்பாக சீதாராம சமேத ஆஞ்சநேயரை வழிபடுதல்.

Simple 3 questions prediction starting just Rs 149/~