கலை ஆர்வத்திற்கு பெயர் போன ரிசப ராசி அன்பர்களே,

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டம சனியின் பாதிப்புகளால் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான தாங்கள் தற்போது சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் நேரம்.
ஆம் உங்களை இரண்டரை ஆண்டுகளாக படுத்தி எடுத்த அஷ்டம சனி முடிவுக்கு வந்து விட்டது. எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடமான மகரத்திற்கு சனி இடம் மாற்றம் அடைந்து விட்டார்.
இதனால் புண்ணிய தீர்த்த யாத்திரைகள் செய்வது,தந்தை வழி சொத்துக்கள் சேர்வது தந்தையின் ஆதரவு கிடைப்பபது போன்ற சுப பலன்கள் நிச்சயம் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் கூட நிறைவேற வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் :-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக படிப்பில் பல்வேறு தோல்விகளை சந்தித்து விரக்தியின் உச்சத்தில் இருந்த நீங்கள் இனி படிப்பில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். வேலை நிச்சயம் கிடைக்கும், வேலை தேடி அலைந்த நபர்களுக்கு இது மிகவும் நல்ல செய்தியாக அமையும்.
சொந்த தொழில் புரிவோர் :-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம், ஊழியர்களால் பிரச்சனை என்று இருந்த உங்கள் தொழில் இனி ஏறுமுகத்தில். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும் ஆகவே கவலையை விட்டு தைரியமாக வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
பணிபுரிவோர் :- இடம் மாற்றம் , சக ஊழியர்களுடன் பிரச்சினை குறிப்பாக கீழ் நிலை ஊழியர்களால் பிரச்சனை என போர்க்களமாக இருந்த அலுவலக சூழல் நிச்சயம் மாறி நல்ல பலனை அளிக்கும் கால கட்டம் இது.
அரசியல்வாதிகள் :- கடந்த முறை தேர்தலில் போட்டு இருந்தால் நிச்சயம் தோற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறை அப்படி அல்ல . தேர்தலில் நின்றால் வெற்றி நிச்சயம். இந்த முறை பதவி உயர்வும் செல்வாக்கும் நிச்சயம் அதிகரிக்கும்
விவசாயிகள் :- கடந்த இரண்டரை ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம்,கால்நடை இழப்பு, எதிர்ப்பார்த்த விளைச்சல் இல்லாமை , விளைச்சல் இருந்தாலம் விலை கிடைக்காமல் நஷ்டம், பூச்சிகளால் பயிர் தாக்குதல் என பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்ட தாங்கள் அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
வரும் காலம் உங்களுக்கும் செழிப்பும் செல்வாக்கும் நிறைந்ததாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சனிபார்வை பலன் :-
மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பார்த்த லாபம் வருவது சிரமமான காரியம்.
ஏழாம் பார்வையால் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் இளைய சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு, அவர்களுக்கு உடல்நல பாதிப்புகளோ வரலாம். சிலர் நண்பர்களுக்கு உதவி செய்ய போக சிக்கலில் மாட்டி கொள்வார்கள்.
பத்தாம் பார்வையால் ஆறாம் இடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகள் வர வாய்ப்பு உண்டு. சிலருக்கு உடல் ரீதியாக சொல்லி கொள்ள இயலாத அளவுக்கு மறைமுக பாதிப்புகள் வரும்.
வழிபாடுகள் :- சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு.r