Simple 3 questions prediction starting just Rs 149/~


சிந்தனைக்கும் செயல் திறனுக்கும் பெயர் போன கடக ராசி அன்பர்களே,

இந்த சனி பெயர்ச்சியானது ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் இடம் என்றழைக்கப்படும் களத்திர ஸ்தானத்திற்கு அமைய உள்ளது.
நீண்டகாலம் திருமணம் நடைபெறாமல் துயருற்று இருந்த பலருக்கும் இந்த சனிபெயர்ச்சியானது சுபகாரியத்தை நடத்தி வைக்கும்வகையில் அருள் புரிவார்.  ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கை துணைவரின் உடல் நலம் சற்று பாதிக்கப்படும்.
மாணவர்கள் :-
ஓரளவு நல்ல மாற்றம் உண்டு. எதிர்ப்பார்த்த அளவு வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். இந்த இரண்டு வருடங்கள் உங்களுக்கு சாதகம் என்பதால் உங்கள் படிப்புகளை கூடுமான வரையில் முடித்துவிட பாருங்கள்.
சொந்த தொழில் புரிவோர் :- 
புதிய கூட்டாளிகள் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் ரீதியாக ஏற்றம் உண்டு. நீண்ட நாள் கனவுகள் மெய்ப்படலாம்.
பணிபுரிவோர் :- 
பதவி உயர்வு உண்டு நல்ல சம்பளத்துடன். சிலர் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த இடமாற்றம் கூட கிடைக்கும். புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.
அரசியல்வாதிகள் :- 
அரசியலில் இது அறுவடை காலம். உங்கள் உழைப்புக்கு நல்ல பலனை பெறுவீர்கள் . சிலர் இட மாற்றம் குறித்து யோசிப்பீர்கள். அதுவும் ஒரு நல்ல முடிவுதான் என்பதை காலம் உணர்த்தும்
விவசாயிகள் :- 
இந்த முறை நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பிற்கு பலன் உண்டு. நல்ல லாபமும் விளைச்சலும் உண்டு. கால்நடை செல்வங்கள் அபிவிருத்தி ஆகும். புதியதாக கிணறு அமைத்தல் நலம் தரும்.
சனிபார்வை பலன்கள் :-
மூன்றாம் பார்வையால் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் புண்ணிய தீர்த்த யாத்திரை செய்ய வாய்ப்புண்டு. தந்தை உடல் நலத்தில் கவனம் தேவை.
ஏழாம் பார்வையால் ஜென்ம ராசியை பார்ப்பதால் இடம் மாற்றம் நிச்சயம். சிலருக்கு உடல் ரீதியாக சிறு சிறு தொந்தரவு வரும்.
பத்தாம் பார்வையால் நான்காம் இடத்தை பார்ப்பதால் வீடு மனை சம்பந்தமாக விரயம் வரலாம். தாயாரின் உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை.
வழிபாடுகள் :- 
துர்க்கை வழிபாடு நல்ல பலன் தரும்.

Simple 3 questions prediction starting just Rs 149/~