Get Predictions in

தமிழ் & English

My predictions cover all houses,
Important dashas and your questions.



Simple 3 questions prediction starting just Rs 149/~


How do you like the post?
+1
0

+1
0

+1
0

+1
0

+1
0

சுறுசுறுப்புக்கும் வேகத்திற்கும் பெயர் போன மேஷ ராசி அன்பர்களே இந்த சனி பெயர்ச்சியானது தங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திலிருந்து பத்தாம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்திற்கு அமைகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக சில சில இன்னல்களை அனுபவித்து வந்தீர்கள் குறிப்பாக தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு, தந்தை வழி உறவினர்களால் இடர்பாடுகள்,புண்ணிய தீர்த்த யாத்திரைகள் செல்வது போன்ற பல வழிகளில் பண விரயமும் நடைபெற்றது.
இந்த முறை தொழில் ரீதியாக இடம் மாற்றம் நிச்சயம் உண்டு. பலருக்கு புதியதாக தொழில் செய்யும் வாய்ப்புகள் வரலாம். வேலை கிடைக்காமல் அவதிப்படுவோருக்கு புதிதாக வேலை கூட கிடைக்கலாம். எது எப்படியோ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டு.
மாணவர்கள் :-
படிப்பு முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்களுக்கும் சரி படித்து முடித்து வேலை தேடிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும் சரி நிச்சயம் வேலை கிடைக்கும். நீங்கள் எதி்ர்ப்பார்க்கும் அளவிற்கு இல்லாது போனாலும் ஓரளவு கௌரவமான வேலை கிடைக்கும். இந்த முறை பரிட்சை எழுதுபவர்கள் கஷ்டப்பட்டு படித்தால்தான் ஓரளவு தேற முடியும்.
பணி புரிவோர் :-
இடம் மாற்றம் நிச்சயம் உண்டு. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடம் மாற்றம உண்டு. கீழ்நிலை ஊழியர்களால் சில சில தொந்தரவுகள் வரலாம்.
சொந்த தொழில் புரிவோர்:-
தொழில் ரீதியாக புதுப்புது யுக்திகளை செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டிய சூழல் வந்தால் தயங்காமல் மாற்றுங்கள். அதே சமயம் புதிய தொழில் தொடங்குவதற்கான சூழல் கை கூடி வரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் பிணக்கு ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :- தேர்தலில் போட்டி போடுபவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம். சிலர் கட்சி மாறலாமா என்று கூட யோசிப்பீர்கள்.
விவசாயிகள் :-
கடந்த முறையை காட்டிலும் ஓரளவு லாபகரமாக இந்த ஆண்டு அமையும். கால்நடைகள் விசயத்தில் கவனம் தேவை.
சனி பார்வை பலன் :-
சனீஸ்வர பகவான் தனது மூன்றாம் பார்வையால் விரயம் எனப்படும் 12 ஆம் இடத்தை பார்ப்பதால் எதிர்பாராத விரயங்கள் வந்து சேரும். சிலருக்கு கால் பாதங்களில் வலி ஏற்பட்டு தொந்தரவுகள் வரலாம்.
அடுத்தபடியாக ஏழாம் பார்வையால் 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தை பார்ப்பதால் சுக போகங்களை குறைவாக அனுபவிக்கும் நிலை வரும்.தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். தாய் வழி உறவினர்களால் சிரமும், வாகனங்களால் செலவும், வீடு பராமரிப்புக்காக சில சில இடர்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
அடுத்தபடியாக பத்தாம் பார்வையால் ஏழாம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் கை கூடாதவர்களுக்கு எதிர்பாராமல் திருமணம் கை கூடும். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் விசயத்தில் வாழ்க்கை துணைவருக்கு சில பாதிப்புகளை தரலாம்.
வழிபாடுகள்:-
சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் ஏற்றம் தரும்
How do you like the post?
+1
0

+1
0

+1
0

+1
0

+1
0


Get Predictions in

தமிழ் & English

My predictions cover all houses,
Important dashas and your questions.



Simple 3 questions prediction starting just Rs 149/~


How do you like the post?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0